சுவிட்சர்லாந்தில் மண்சரிவில் சிக்கிய வாகன சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லுகார்னோ சிமாட்ரேவில் இந்த மண்சரிவு சம்பவம் பதிவாகியிருந்தது.
வாகனத்தில் பயணம் செய்த போது மண்சரிவு ஏற்பட்டதாகவும் இதன் போது வாகனம் மண்சரிவில் சிக்குண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 44 வயதான சுவிஸ் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.