ஜெனிவாவில் ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தடை உத்தரவிற்கு ஜெனிவா நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி தொடக்கம் ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என ஜெனிவா மாநகர சபை அறிவித்திருந்தது.
எனினும் இந்த தடைக்கு எதிராக சுவிட்சர்லாந்து சில்லறை விற்பனையாளர்கள் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் குறித்த தடைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக உணவகங்கள், சில்லறை கடைகள் ஹோட்டல்கள், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சில்லறை வியாபாரிகள் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.