தமக்கு தண்டனை விதிக்க வேண்டாம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலத்தில் ஆபாச பட நடிகை ஒருவருக்கு ட்ரம்ப் அரசியல் கையூட்டல் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
நியூயோர்க் நீதிமன்றினால் இந்த தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
உண்மைகளை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக இந்த கையூட்டல் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமக்கு தண்டனை விதிப்பதனை இடைநிறுத்துமாறு ட்ரம்ப் கோரியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றம் ட்ரம்பிற்கு எதிராக தண்டனையை அறிவிக்க உள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டால் அது ஜனாதிபதி பதவிக்கும் அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தண்டனை விதிக்க வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.