காப்பி அருந்துவதன் ஊடாக பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்க பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வேண்டும் காலை வேளையில் அருந்தும் காபி தான் கூடுதல் நலன்கள் கிடைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அருந்தும் காபிகளில் அதிக அளவு நன்மை கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 40000 வயது வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
காலை வேளையில் காபி அருந்துவோருக்கு நன்மைகள் அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் காலை வேளையில் காபி அருந்தும் 16 வீதமானவர்களுக்கு வேறும் நோய்களில் உயிரிழப்பதற்கான சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காலை வேளையில் காபி அருந்துபவர்களுக்கு மாரடைப்பு நோயினால் மரணம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் 31 வீதம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
நாள் முழுவதும் அடிக்கடி காபி அருந்துபவர்களுக்கு அவ்வாறான நலன்கள் கிடைக்க பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.