உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்கள் தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, இந்த விரும்பத்தக்க சிவப்பு பயண ஆவணத்தை வைத்திருப்பவர்கள், உலகெங்கிலும் உள்ள 227 நாடுகளில் 195 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
உலகில் வேறு எந்தவொரு நாட்டு கடவுச்சீட்டை விடவும் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி கூடுதலான நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 முடக்கத்தை தொடர்ந்து முதல் முறையாக அண்டை நாடான சீனாவுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்ற ஜப்பானின் கடவுச்சீட்டைக் கொண்டு 193 நாடுகளுக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை பின்லாந்து மற்றும் தென் கொரியாவுடன் 3வது இடத்தில் உள்ளன.
இந்த நாடுகளுக்கு முன் விசா தேவையில்லாமல் 192 இடங்களுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் நான்காவது இடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையற்ற ஷெங்கன் பகுதியின் சக்திக்கு ஒரு சான்றாகும், இது 425 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு சுதந்திரமான இயக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்களைக் கொண்டு 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய ஐந்து நாடுகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் கடவுச்சீட்டு வரிசை பின்வருமாறு….
1. சிங்கப்பூர் (195 இடங்கள்)
2. ஜப்பான் (193)
3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192)
4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே (191)
5. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் (190)
6. கிரீஸ், ஆஸ்திரேலியா (189)
7. கனடா, போலந்து, மால்டா (188)
8. ஹங்கேரி, செக்கியா (187)
9. எஸ்டோனியா, அமெரிக்கா (186)
10. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185)