சுவிட்சர்லாந்தில் ஏதிலிகளுக்கு கொடுப்பனவு அட்டை முறைமை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஜெர்மனியில் ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு நலன்புரி திட்டங்களை வழங்குவதற்காக இந்த கொடுப்பனவு அட்டை முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு நிகராக சுவிட்சர்லாந்திலும் கொடுப்பனவு அட்டை முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கான்டன்களில் இது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுப்பனவு அட்டை முறைமைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏதிலிகளுக்கு நிதிசார் நலன் குறித்த திட்டங்களை வழங்கும் போது அவர்களுக்கான ஓர் கொடுப்பனவு அட்டையை வழங்குவதன் மூலம் இந்த செயல்முறையை இலகு படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொடுப்பனவு அட்டை மூலம் உள்நாட்டில் கொடுப்பனவுகள் மேற்கொள்ள முடியும்.
எனினும் இந்த அட்டையை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி வைக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.