அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரையில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வரலாற்றில் இடம் பெற்ற மிக மோசமான காட்டுத்தீச் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான காட்டு தீ பரவுகை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் தற்பொழுது நீச்சல் தடாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நீரை பெற்றுக் கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது காட்டுத்தீ பரவுகையானது அமெரிக்காவின் மிகப் பிரபல்யமான ஹாலிவுட் பகுதியை ஆக்கிரமித்து உளளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹாலிவுட் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக மிக முக்கியமான நினைவுச் சின்னங்கள் அழிவடையக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த காட்டுத்தீ பரவுகை தீவிரம் பெற்றுள்ளதாகவும் இதனால் அழிவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.