உலகின் மிகப் பழமையான பனிப்பாறை என கருதப்படும் பகுதியொன்று வெற்றிகரமாக மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்டிக் பகுதியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட பனிப்பாறைகளில் இதுவே மிகவும் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2.8 கிலோமீட்டர் நீளமுடைய இந்த பனிப்பாறை குறைந்தபட்சம் 1.2 மில்லியன் வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பனிப்பாறை காலநிலை தொடர்பான ஆய்வுகளுக்கு ஓர் மைல்கல்லாக அமையும் என நம்பிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
மிகவும் நீளமான பனிப்பாறை இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு அண்டார்டிக் பகுதியில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்த பனிப்பாறை சுமார் 8 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பனிப்பாறையை கொண்டு பல்வேறு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பூமியின் கட்டமைப்பு தொடர்பில் இந்த பனிப் பாறையின் ஊடாக பல தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பனிப்பாறையின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு ஐரோப்பாவிற்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.