அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ட்ரம்ப் அரசியல் கையூட்டு வழங்கியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஆபாச பட நடிகை ஒருவருடன் பேணிய தொடர்பினை மூடி மறைக்குமாறு அந்த நடிக்கைக்கு பெருந்தொகை பணத்தை ட்ரம்ப் வழங்கியிருந்தார்.
தேர்தலில் தனது வெற்றியை பாதிக்கும் என்ற காரணத்தினால் இந்த தொடர்பினை மூடி மறைப்பதற்கு ட்ரம்ப் பணம் வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நியூயோர்க் நீதிமன்றில் ட்ரம்பிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ட்ரம்ப் குற்றவாளி என அறிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் ட்ரம்பிற்கு எதிராக நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.
எந்தவிதமான தண்டனையையும் வழங்காது நீதிமன்றம் ட்ரம்ப் ஓர் குற்றவாளி என அறிவித்துள்ளது.
இதன்படி ட்ரம்பிற்கு சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படவில்லை.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்வாறு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டவை எனவும் தாம் ஓர் அப்பாவி எனவும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் டொனால்ட் டராம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பின் பிரகாரம் ட்ராம்ப் எதிர்வரும் 20ம் திகதி எவ்வித தடையும் இன்றி அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.