ரஷ்ய ஜனாதிபதி புட்டினை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் இப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்பதை பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை.
புளொரிடாவில் அமைந்துள்ள ட்ரம்பின் பிரத்தியேக இல்லத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
புட்டின் தம்மை சந்திக்க விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா இந்த சந்திப்பு குறித்து அறிவிக்கவில்லை என ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 20ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உக்கிரேனுடன் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் வகிக்கப் போவதாக டிரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி புட்டின், தம்மை சந்திக்க விரும்புவதாக ட்ரம் தெரிவித்துள்ளார்.
மொஸ்கவுடன் சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கினால் மட்டுமே அமெரிக்கா தொடர்ந்து உக்ரேனுக்கு உதவிகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமாதான பேச்சு வார்த்தைகளை ரஷ்யா நிராகரித்தால் உக்கிரேனுக்கு தொடர்ந்தும் ராணுவ உதவிகள் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.