ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவரும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரத்துங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் உதயங்கவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மிரிஹான பொலிஸார் உதயங்க வீரத்துங்கவை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதில் சுவர் ஒன்று தொடர்பாக அயலவருடன் ஏற்பட்ட முரண்பாட்டு காரணமாக உதயங்க வீரத்துங்க, அயலவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொட தலபத்பிட்டிய பிரதேசத்தில் வைத்து உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டதாகவும் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் உதயங்க முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.