அண்மையில் ஆஸ்ட்ரியாவில் விபத்துக்குள்ளான சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நாடு திரும்பியுள்ளது.
இரண்டரை வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரியாவின் கிராஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தின் கொக்பீட் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டதனால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
புகை மூட்டத்தில் சிக்கிய ஒரு விமான பணியாளர் உயிரிழந்தார்.
மேலும் சில விமான பணியாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த புகை மூட்டத்தை சுவாசித்த பயணிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விமானம் பயணிகள் யாருமின்றி நாடு திரும்பியுள்ளது.
விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தின் எஞ்சின் புதிதாக பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் விமான நிலையத்தில் இந்த விமானம் மேலதிக தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.