சுவிட்சர்லாந்தில் தனியார் நிறுவனங்கள் பெருந்தொகையில் ஆய்வுகளுக்காக முதலீடு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக சுமார் 18 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 1.2 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மருந்து பொருட்கள் உற்பத்தியை துறையில் கூடுதல் அளவில் ஆய்வுகளுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 3500 நிறுவனங்கள் ஆய்வு பணிகளுக்காக முதலீடுகளை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் ஆய்வுகளுக்காக முதலீடு செய்யும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.