சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் வயோலா ஹம்ஹார்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேர்னில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஹம்ஹார்ட் பதவி விலகுகின்றார் என்பது தொடர்பில் சில காலமாகவே வதந்திகள் வெளியாகியிருந்தன.
சுவிட்சர்லாந்தின் மத்திய கட்சியின் அரசியல்வாதியான 62 வயதான ஹம்ஹார்ட் கடந்த 2019ம் அண்டு முதல் சுவிஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்றார்.
நீண்ட காலமாக அரசியலில் பதவி வகித்து வந்ததாகவும், தற்பொழுது அதனை விட்டு விலகுவதற்கான காலம் எனவும் ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
தமது பதவி காலத்தில் அனைத்து விடயங்களும் நூறு வீதம் சரியாக நடைபெறவில்லை என்ற போதிலும் கணிசமான அடைவுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.