ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ரயன் எயார் விமான சேவை நிறுவனம் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் மதுபானம் தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது.
விமானங்களில் வழங்கப்படும் மதுபானத்தின் அளவை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விமான நிலையங்களில் ஏற்படக்கூடிய குழப்பநிலையை தவிர்ப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ரயன் எயார் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விமானத்தில் வழங்கப்படும் மதுபான அளவு வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரண்டு கிளாஸ் மதுபானம் மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணங்கள் தாமதமாகும் காரணத்தினால் பயணிகள் அதிக அளவு மதுபானம் அருந்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் வழங்கப்படும் மதுபானத்துடன் சிலவேளை பயணிகள் தீர்வையற்ற கடைகளில் மதுபானம் கொள்வனவு செய்து அருந்துவதாகவும் இவ்வாறு அதிக அளவு மதுபானத்தை அருந்துவதனால் சில நேரங்களில் குழப்ப நிலைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.