இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையில் போர் நிறுத்தம்

Must Read

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 மாதங்களாக இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வருகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த பணயக் கைதிகள் விடுதலைசெய்யப்படுவதாகவும், இஸ்ரேல் படையினர் காசாவை விட்டு வெளியேறுவதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 1200 பேர் கொல்லப்பட்டதுடன் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இஸ்ரேலிய படையினர் காசா மீது நடத்திய தாக்குதல்களில் 46000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களினால் கொண்டாட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த போர் நிறுத்தம் தொடர்பில் கட்டார் அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்காலிக அடிப்படையிலான போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ளதாகவும், கட்டம் கட்டமாக முழு அளவிலான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.