காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இந்த யோசனைக்கு இன்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துதல் மற்றும் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஹமாஸ் இயக்கத்துடன் போர் நிறுத்தம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என அமெரிக்கா எதிர்ப்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை, காசாவில் போர் நிறுத்தம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதன் பின்னர் இதுவரையில் 110 பலஸ்தீனர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.