சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கிற்கும், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.