சுவிட்சர்லாந்தின் சில முக்கிய இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்ய ஹெக்கர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அந்த மாநாட்டை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெனீவா, சியரே ஆகிய நகர நிர்வாகங்களின் இணைய தளங்கள் மீதும் சச்பாசேன் கான்டன் இணைய தளத்தின் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த சைபர் தாக்குதல் சம்பவத்தில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.