ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் தங்கி இருக்கும் அதிகாரப்பூர்வ இல்லங்களை பொருளாதார நலன் தரக்கூடிய திட்டங்களுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை தவிர்ந்த ஏனைய ஜனாதிபதி மாளிகைகளும் அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களும் பொருத்தமான திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது 5 முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மனைவியும் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இவர்களில் சிலருக்கு இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலகியதும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மீள படைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார்.
ஹேமா பிரேமதாச நீண்ட காலமாக அரசாங்க இல்லத்தில் தங்கி இருந்து அண்மையில் அந்த வீட்டை ஒப்படைத்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இவ்வாறு அரசாங்க அதிகாரப்பூர்வ இல்லங்களில் தங்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்தும் வீடானது 30500 சதுர அடிகளை கொண்டது எனவும் இது சுமார் 350 கோடி பெறுமதியானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டின் மாத வாடகை சுமார் 46 லட்ச ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரிக்காவின் இல்லத்தை 20 லட்சத்திற்கு வாடகைக்கு விடலாம் எனவும் மைத்திரியின் இல்லத்தை 9 லட்சத்திற்கு வாடகைக்கு விடலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வீடுகளை வேறும் காத்திரமான திட்டங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.