நடுவானில் நோய்வாய்ப்பட்ட சுவிஸ் விமானி

Must Read

சுவிட்சர்லாந்து விமானம் ஒன்றுவிமானத்தின் விமானி நோய் வாய் பட்ட நிலையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மியாமி நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு இடை நடுவில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் பகுதிக்கு மேல் பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தின் ஒரு விமானி நோய் வாய் பட்ட காரணத்தினால் மீண்டும் சூரிச் நகருக்கு திரும்பி உள்ளது.

விமானம் தரையிறக்கப்பட்ட போது தீயணைப்பு படையினர் ஆயத்த நிலையில் விமான நிலையத்தில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

LX66 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் ஒரு விமானி நோய் வாய் பட்டிருந்த காரணத்தினால் இவ்வாறு தீர்மானம் எடுக்க நேரிட்டதாக விமான சேவை நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பெருமளவு எரிபொருட்கள் எஞ்சி இருந்த காரணத்தினால் தரையிறக்கப்படும் போது ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தீயணைப்பு படையினரின் உதவி நடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்பாராத விதமாக விமானம் தரையிறக்கப்பட்ட காரணத்தினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பயணிகளுக்கு தேவையான தங்குமிட வசதிகள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை விமான சேவை நிறுவனம் மேற்கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.