சிரியாவிற்கு எதிரான தடை உடன் நீக்கப்படாது என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காஸீஸ், சிரிய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சிரிய இடைக்கால அரசாங்க ஆட்சியின் கீழ் தற்போதைக்கு தடைகளை நீக்கும் திட்டமில்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இடைக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் தீர்மனாங்கள் எடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.