பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்திய 18 வயதான இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பிரபல பாடகி டேய்லர் ஷிப்ட் எண்ணக்கருவிலான நடன நிகழ்ச்சியொன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 சிறுமியர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறித்த இளைஞன் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அலெக்ஸ் டுடாகும்பானா என்ற 18 வயது இளைஞனுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.