மெக்சிகோ எல்லை பகுதியில் பத்தாயிரம் படையினரை கடமையில் ஈடுபடுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமான முறையில் குடியேறுவோரை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான படையினரை கடமையில் அமர்த்தி நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா மெக்சிகோ எல்லை பகுதியில் இவ்வாறு படையினர் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர்.
ஏற்கனவே சுமார் 1500 படையினரை கடமையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியேற்றுக் கொண்டது முதல் அமெரிக்க ஜனாதிபதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறும் ஏதிலி கோரிக்கைக்கான பரிசீலனை இன்றி நாடு கடத்தப்படுவர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.