-6.3 C
Switzerland
Saturday, February 8, 2025

லஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வு அதிகாரி கைது

Must Read

5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முறைப்பாட்டாளரை வெலிசறை குடிவரவு குடியகல்வு நிறுவனத்தில் இருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதற்காகவே சந்தேகநபர் இந்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குடிவரவு திணைக்களத்தின் வெலிசர தடுப்பு நிலையத்தில் கடமையாற்றும்  குடிவரவு அதிகாரி ஆவார்.

சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி பிற்பகல் குடிவரவு திணைக்களத்தின் வெலிசறை தடுப்பு முகாமில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES