உலக சுகாதார ஸ்தாபனம் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இவ்வாறு செலவு குறைப்பு குறித்து திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஆளணி அமர்த்துவது இடைநிறுத்தப்படுவதாகவும், தேவையற்ற பயணங்கள் வரையறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதானது நிறுவனத்தின் நிதி இயலுமையில் பெரும் சவாலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.