சுவிட்சர்லாந்தில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கேபிள் கார்கள், சுற்றுலா பயணங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட மக்களின் பொழுதுபோக்கு சார்பான விடயங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
பொழுதுபோக்கு விலை சுட்டெண் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த 2024 ஆம் ஆண்டில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான செலவுகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பணவீக்க வீதம் உள்ளிட்ட காரணிகளின் தாக்கம் காரணமாக இவ்வாறு செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பனிச்சறுக்கு விளையாட்டுக்கள், ஸ்கீயிங் போன்றவற்றிற்காக செலவுகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.