சுவிட்சர்லாந்தில் ஏதிலிக் கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் நிராகரிப்பு வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் ஏதிலிக் கோரிக்கையாளர் விண்ணப்ப நிராகரிப்பு வீதம் கடந்த 2023ம் ஆண்டை விடவும் 18.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் 6077 ஏதிலிக் கோரிக்கையாளர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7205 ஆக உயர்வடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் குடிவரவு குறித்த மத்திய செயலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட ஏதிலிகளின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் 2023ம் ஆண்டை விடவும் கடந்த ஆண்டு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட 2467 பேர் தாமாகவே நாட்டை விட்டுச் சென்றதாகவும் 4738 பேர் பாதுகாப்பின் மத்தியில் நாடு கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான உக்ரேனியர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.