சுவிட்சர்லாந்திற்கும் ஜெர்மனிக்கும் இடையில் நேரடி ரயில் சேவை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கும் ஜெர்மனியின் முனிச் நகருக்கும் இடையில் நேரடி ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியின் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் போக்குவரத்து நிறுவனம் ஒன்று இந்த முயற்சியை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்படுககின்றது.
குறித்த நிறுவனம் சுவிட்ச்லாந்தின் சில பகுதிகளுக்கு ரயில் சேவையை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜூரிச் முனிச் பகுதிகளில் நேரடி விமான சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
பேர்ளின் – பேசல் நகரங்களுக்கு இடையில் ஏற்கனவே நேரடி ரயில் சேவை காணப்படுகின்றது.