200 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது

Must Read

இஸ்ரேலிய அரசாங்கம் சுமார் 200 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் இவ்வாறு 200 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஹமாஸ் போராளிகளினால் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த நான்கு இஸ்ரேலிய பெண் படை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்ட இரண்டாவது குழுவில் இந்த பெண் படைவீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்த உடன்படிக்கையை மதிக்காமல் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

சிவிலியன் பணய கைதியான ஆர்பெல் யாகித் என்பவரை ஹமாஸ் போராளிகள் இதுவரையில் விடுவிக்கவில்லை என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே இடம்பெயர்ந்த பலஸ்தீன பிரஜைகள் வடக்கு காசா பகுதியில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்க படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சார்பில் உயிருடன் இருப்பதாகவும் அடுத்த வாரம் அவரை விடுவிக்க உள்ளதாகவும் ஹமாஸ் அறிவித்துள்ளது.

பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து இஸ்ரேலிய தரப்பில் மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெண் படைவீரர்களுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னமும் 87 இஸ்ரேலிய பணய கைதிகள் ஹமாஸ் போராளிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் 53 பேர் உயிருடன் இருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன்.

34 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை முன்னிட்டு மேற்கு கரை பகுதியில் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.