மற்றுமொரு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி வழக்கு

Must Read

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.

3,000 வெசாக் வாழ்த்து அட்டைகள் அச்சிடப்பட்டதன் காரணமாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்கு 128,520 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி ரூ. 360,000 ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மற்றுமொரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அரசாங்கத்திற்கு 494,000 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் அரசியல்வாதிகள் சிலரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.