அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா

Must Read

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான நிவிடியா (Nvidia) நிறுவனம் தனது சந்தை பெறுமதியிலிருந்து 600 பில்லியன் டொலர் வரையில் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றின் வளர்ச்சி காரணமாக இவ்வாறு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் டீப் சீக் (DeepSeek) எனப்படும் ஓர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் லாபத்தை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டீப் சீக் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு காலமே பூர்த்தியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏ.ஐ அல்லது செயற்கை நுண்ணறிவு மாடல்களை பின் தள்ளக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்தை இந்த டீப் சீக் நிறுவனம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டீப் சீக் நிறுவனம் சாட் ஜீபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு சவால் விடுக்கக் கூடிய வகையிலான ஆர்.1 என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம செய்துள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல நூறு பில்லியன் டாலர்களை செலவிட்டு உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை டீப் சீக் நிறுவனம் 5.6 பில்லியன் டாலர்களில் எட்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் அபாரமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை குறைந்த செலவில் வழங்கி வருவதாகவும் கூகுள் மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்க கூடிய வகையில் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாற்றம் மேற்கு நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் விநியோகஸ்தர்களாக தற்பொழுது கருதப்படும் நிவிடியா நிறுவனம் சுமார் 600 பில்லியன் டாலர் சந்தை பெறுமதியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே நாளில் இந்த இழப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மெட்டா நிறுவனம் ஒரே நாளில் 240 பில்லியன் டொலர் சந்தை பெறுமதியை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தையில் முதலாம் இடத்தை வகித்து வந்த நிவீடியா நிறுவனம் ஒரே நாளில் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை விட பின் தள்ளப்பட்டு மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும்ஏனைய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் சந்தை பெறுமதியை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் சீன நிறுவனத்தின் அசுர வளர்ச்சியான நீடித்து நிலைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.