இஸ்ரேல் பணயக் கைதிகள் சிலர் இன்று விடுதலை

Must Read

இஸ்ரேலிய பணயக் கைதிகள் சிலர் இன்றைய தினம் விடுவிக்கப்பட உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஐந்து தாய்லாந்து பிரஜைகளும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதான ஆர்பல் யியாயுடன், 19 வயதான அகம் பேர்கர் மற்றும் 80 வயதான காடி மோசஸ் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

ஹமாஸ் இயக்கம் குறித்த பணயக் கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக தாய்லாந்து பிரஜைகளும் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.