முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை

Must Read

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை குறைப்பதில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் அரசாங்க பணத்தை விரயம் செய்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சலுகை குறைப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்பட்டாலும் அவை கடந்த காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கே வழங்கப்படும் சிறப்பு உரிமைகள் வரப்பிரசாதங்கள் என்பனவற்றை குறைப்பதில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இல்லம் சுமார் 4.6 மில்லியன் ரூபாவிற்கு வாடகைக்கு விடப்படக்கூடியது என அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் சலுகைகளை குறைப்பதற்கு திட்டமிட்டு இருந்தது.

எனினும் இவ்வாறு சலுகை குறைப்பு செய்வதற்கு அரசியல் சாசனத்தின் பிரகாரம் சில தடைகள் காணப்படுவதாக தற்பொழுது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.