தென் சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜூபாவிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் விபத்து இடம்பெற்றதாக சூடான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விமானத்தில் 21 பேர் பயணித்துள்ளதாகவும் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் விமானியும், துணை விமானியும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதனால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.