ஆவணங்கள் அற்ற குடியேறிகளை குவான்டனாமோவில் தடுத்து வைக்க ட்ரம்ப் தீர்மானம்

Must Read

ஆவணங்கள் இல்லாத சட்டவிரோத குடியேறிகளை குவான்டனாமோவில் தடுத்து வைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குவான்டனாமோ தடுப்பு முகாம் கியூபாவில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மோசமான தடுப்பு முகாம்களில் ஒன்றாக குவான்டனாமூ சிறை அடையாளப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியில் சட்டவிரோத குடியேறிகளை குவான்டனாமோவிற்கு அனுப்பி வைப்பதற்கு ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அமெரிக்காவில் குமார் 11 மில்லியன் குடியேறிகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியேறிகளை தடுத்து வைப்பது தொடர்பில் லேகன் ரெய்லி என்னும் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடியேறிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் இந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடுப்பு முகாமை மூடிவிடுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வரும் நிலையில் ஜனாதிபதி டரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மோசமான சித்திரவதை கூடங்களில் ஒன்றாக குவான்டனாமோ சிறைக்கூடம் கருதப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.