சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபரின் பெற்றோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொள்வதற்காக சிரியாவிற்கு சென்ற இளைஞர் ஒருவரின் பெற்றோருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ஐ.எஸ் மற்றும் அல் கய்தா தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான தடை விதிப்பு சட்டங்களை மீறியதாக இந்த பெற்றோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரின் தாய்க்கு 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்த தண்டனை இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இளைஞரின் தந்தைக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்த தண்டனை 8 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.