9 C
Switzerland
Wednesday, May 21, 2025

ஜெனிவாவில் இலவச பொதுப் போக்குவரத்து வசதி

Must Read

ஜெனிவாவில் இலவச பொது போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் பொது போக்குவரத்து சேவைகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிரிஷ்ட பிரஜைகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த இலவச பொது போக்குவரத்து நடவடிக்கை குறித்து மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பாவின் லக்ஸம்பேர்க் போன்ற நகரங்களில் இந்த இலவச பொதுப் போக்குவரத்து சேவை ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யோசனை பல்வேறு பிராந்தியங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா கான்டனில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த இலவச பொதுப் போக்குவரத்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது வசதி குறைந்தவர்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் இலவசமாக பயணிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு எனினும் இந்த திட்டம் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES