அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிடல்பெலியாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு என்ஜின்களைக் கொண்ட ஜெட்ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் ஆறு பேர் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் 1650 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களின் நிலைமை பற்றி விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.