இஸ்ரேல் பணயக் கைதிகள் மற்றும் பலஸ்தீன பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் போராளிகள் மூன்று இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 183 பலஸ்தீன பணயக் கைதிகளை இஸ்ரேல் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.
இரு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் இவ்வாறு கட்டம் கட்டமாக பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேலினால் விடுதலை செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலினால் விடுதலை செய்யப்படும் பலஸ்தீன பிரஜைகள் அதிகளவில் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இடம்பெயர்ந்த பலஸ்தீன மக்கள் தற்பொழுது சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.