இளைஞர்கள் மத்தியில் பரசிட்டமோல் என்னும் வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளும் போட்டி ஒன்று சமூக ஊடகம் வழியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றான டிக் டாக் வழியாக இந்த சவால் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையிலான பரசிட்டமோல் மாத்திரைகளை உட்கொண்டு நீண்ட காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்தல், இந்த போட்டியின் வெற்றியாக கருதப்படுகின்றது.
இந்த சவால் மிகவும் ஆபத்தான ஒன்று என மருத்துவர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரசிட்டமோல் மாத்திரைகள் அதிக அளவில் உட்கொள்வது ஈரலை பாதிக்கும் எனவும் சில சமயங்களில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பரசிட்டமோல் மாத்திரைகள் உட்கொண்டு 48 மணித்தியாலங்களில் பின்னரே பாதிப்புகளை தெரிந்து கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறான ஆபத்தான போட்டிகளை முன்னெடுக்க வேண்டாம் என இளம் தலைமுறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரசிட்டமோல் மாத்திரைகளை இளம் தலைமுறையினருக்கு விற்பனை செய்யும் மருந்தகங்கள் இது குறித்து அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.