அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறுவனத்தில் சுவிட்சர்லாந்தின் அரச வங்கி முதலீடு செய்துள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி (எஸ்.என்.பி) இவ்வாறு ட்ரம்பின் ஊடக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இவ்வாறு முதலீடு செய்தமை தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வங்கியின் முதலீட்டு கொள்கை நெறிமுறைக்கு உட்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குறித்த வங்கி ட்ரம்பின் நிறுவனத்தில் 1.78 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
டுவிட்டருக்கு பதிலீடாக ட்ரம்பினால் உருவாக்கப்பட்ட ட்ரூத் சமூக ஊடக நிறுவனத்தில் இவ்வாறு சுவிஸ் வங்கி முதலீடு செய்துள்ளது.