வாகன இறக்குமதி தொடர்பில் இன்றைய தினம் முதல் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனியார் வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சில வாகனங்களை தனியார் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில வகை வாகனங்களை, இறக்குமதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து, விசேட தேவைகளுக்கான வாகனங்கள், வர்த்தக மற்றும் பொருட்கள் போக்குவரத்திற்கான வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கெப் வண்டிகள், ஆட்டோ ரிக்ஷா, மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது.