இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா உடல் நலக்குறைவினால் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கு சமயக் கிரியைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னாரின் இறுதி கிரியை நிகழ்வுகளில் உறவினர்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அன்னாரின் இறுதி கிரியைகளில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் உறவினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரையும் அனுமதிக்க போவதில்லை என குடும்ப தரப்பில் கூறப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இறுதிக் கிரியைகளில் அனைவரையும் பங்கேற்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.