எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்த தரப்பினர் பல்வேறு வழிகளில் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆட்சியை கைவிடப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைவிட்டு செல்லும் நோக்கில் அரசாட்சியை கைப்பற்றவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தராதரம் பார்க்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளிடம் பதிவு செய்யப்படாத வாகனங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.