அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கிய வர்த்தக பங்குதரார்கள் மீது பாரியளவில் வரி விதிப்பு மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்குதாரர்களான சீனா, கனடா மற்றும் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளின் ஏற்றுமதிகள் மீது இவ்வாறு பாரியளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பானது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு நடைமுறையானது மிகப் பாரிய சூதாட்டமாகவே கருதப்பட வேண்டுமென பீட்டர்சன் சர்வதேச பொருளியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் மேரி லாவ்லீ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது பொருளாதாரத்தை மந்த கதியாக்கும் என்பதுடன் பணவீக்கத்தை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் தீர்மானம் பொருட்களின் விலைகளை பாரியளவில் அதிரிக்கும் எனவும் தொழில் வாய்ப்புக்களை இல்லாமல் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிப்பானது பொருளாதார நலன்களை விடவும் பெரும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.