சுவிட்சர்லாந்தில் மாரடைப்பு காரணமாக பெண்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரடைப்பு ஏற்பட்டதன் பின்னர் ஆண்கள் உயிர் பிழைக்கும் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது பெண்கள் அதிகளவில் நோய்வாய்ப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவது குறைவதாகவும், அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்படுவது குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேசல் பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை ஆராய்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரியல் மாற்றங்கள், சமூக கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு நோய்ப் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைமைகளில் இடைவெளி காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.