இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கதந்தையா பாலேந்திரா அல்லது கென் பாலேந்திரா தனது 85 ஆம் வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் இனுவில் பகுதியில் பிறந்த பாலேந்திரா இலங்கையை கூட்டான்மை நிறுவனத் துறைகளில் முக்கிய தடத்தை பதித்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான பாலேந்திரா சிறந்த ரகர் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட துறையில் தொழிலை தொடங்கிய கென் பாலேந்திரா இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வர்த்தகத் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.
இலங்கை புகையிலை நிறுவனம், பிராண்டிக்ஸ், யூனியன் அசுரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தலைவராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கென் பாலேந்திரா கடமையாற்றியுள்ளார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.