அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் விமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த விமான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக விமானத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான பயணங்களுக்கான அச்ச நிலைமையை ஏரோபோபியா அல்லது ஏவியோபோபியா என அழைக்கின்றனர்.
அமெரிக்காவில் அண்மைய நாட்களில் விபத்துக்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் அமெரிக்க மக்கள் விமான பயணங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 25 மில்லியன் பேர் இந்த ஏரோபோபியா என்னும் விமான பயணங்களில் அச்சத்தை வெளிப்படுத்தும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது பெரும்பாலும் 17 முதல் 34 வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணிக்கும் போது வேகமாக இதயம் துடித்தல், வியத்தல், தலை சுற்றல், சுவாசிப்பதில் சிரமம் நெஞ்சுவலி மற்றும் வாந்தி போன்ற பல்வேறு நோய்க்குறிகள் இவ்வாறு ஏரோபிபியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும்.
சிலர் விமானத்தில் பயணம் செய்வதற்கு அஞ்சி ரயிலில் பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்களின் ஆலோசனையுடன் இவ்வாறான அச்ச நிலைமையை நீக்கிக் கொள்ள முடியும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.