அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதாக சீனா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக சீன ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா பத்து வீத வரியை விதித்திருந்தது.
புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கு அமைய இந்த விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்கா, சீன பொருட்கள் மீது வரி விதித்த காரணத்தினால் அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதித்துள்ளது.
சீனாவின் இந்த அதிரடி பதிலடி நடவடிக்கையானது அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் போன்ற நிறுவனங்களை பாதிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கனடா மற்றும் மெக்ஸிக்கோ மீது வரி விதிப்பதாக அறிவித்திருந்தார்.
எனினும் இறுதி நேரத்தில் இந்த வரி விதிப்பு இடைநிறுத்தப்பட்டது.